​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published : Aug 17, 2019 11:49 AM

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

Aug 17, 2019 11:49 AM

நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் கூறுவதாகவும், அவரை நடிகராகவே மக்கள் பார்ப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 39 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையைச் சுற்றி உள்ள ஆயிரத்து 535 கண்மாய்கள், குளங்கள் குடி மராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்படுவதாகவும், அதே போல் மதுரை மாநகருக்குள் உள்ள தெப்பக்குளங்களும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரப்படும் எனவும்  கூறினார். மேலும் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும் எனக் கூறினார்.