​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர்-ஈரோடு இடையே பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

Published : Aug 17, 2019 7:01 AM



திருப்பூர்-ஈரோடு இடையே பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

Aug 17, 2019 7:01 AM

திருப்பூர்- ஈரோடு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட உள்ளதால் பயணிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை ஈரோடு மார்க்கமாக வரும் அனைத்து பயணிகள் ரயில்கள், விரைவு வண்டிகள் மற்றும் அதி விரைவு வண்டிகள் ஆகியவை  ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரு சில ரயில்கள் மாற்றுத் வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன. இதன் காரணமாக திருப்பூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து வேலைக்கு வரும் பொதுமக்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.