​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேச்சு

Published : Aug 17, 2019 6:50 AM

இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேச்சு

Aug 17, 2019 6:50 AM

இந்தியாவுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாகிஸ்தானும், சீனாவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் புகார் அளித்தன.

இந்நிலையில் வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லியின் (Hogan Gidley) அறிக்கையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்தன் ஸ்ரீங்கலா (Harsh Vardhan Shringla) பேட்டி ஒன்றில் காஷ்மீர் பேச்சுவாரத்தையில் டிரம்ப் தலையிடுவது என்பது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுமே ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது என்று தெரிவித்திருந்தார். டிரம்பின் தலையீட்டை ஏற்க முடியாது என இந்தியா ஏற்கனவே உறுதியாகத் தெரிவித்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு தற்போது டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.