​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை 21 நாட்களில் வந்தடையும்

Published : Aug 16, 2019 1:20 PM



கிருஷ்ணா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை 21 நாட்களில் வந்தடையும்

Aug 16, 2019 1:20 PM

கிருஷ்ணா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை 21 நாட்களில் வந்தடையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள செயிண்ட் அனீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தண்ணீர் பிரச்சினை இல்லாத நிலையை உருவாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஒரு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவும், மிகப்பெரிய பணிகளும் அதன் பின்னே உள்ளதாகவும், இந்நிலையில் அதிமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.