​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது

Published : Aug 16, 2019 11:11 AM



தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது

Aug 16, 2019 11:11 AM

கொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநிலங்களவை எம்.பி.யான ரூபா கங்குலியின் 20 வயது மகன் ஆகாஷ் முகோபாத்யா.

வீட்டுக்கு அருகே அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது அங்கு குழுமி இருந்த பொதுமக்கள் இதைக் கண்டு சிதறி ஓடினர். சீறிபாய்ந்த கார்,கோல்ப் கிளப் சுவரில் மோதி  நின்றது.

இதில் சுவர் சுக்குநூறாக உடைந்தது. விபத்து நடந்ததை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தந்தை உதவியுடன் ஆகாஷ் முகோபாத்யா, காரில் இருந்து இறங்கி தப்பியோடியதாக கூறப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து ஜாதவ்பூர் போலீசார், ஆகாஷ் முகோபாத்யாவை தேடிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

இதனிடையே இது குறித்து டுவிட் செய்துள்ள பாஜக எம்.பி. ரூபா கங்குலி, தனது வீட்டு அருகே தனது மகனின் கார் விபத்துக்குள்ளாகி அவன் காயம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.