​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சங்கமாங்குளத்தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணி தொடங்கியது

Published : Aug 15, 2019 6:04 PM

சங்கமாங்குளத்தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணி தொடங்கியது

Aug 15, 2019 6:04 PM

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், உள்ள சங்கமாங்குளத்தில் சீமக்கருவேல மரங்களை 15 பொக்லைன்’ மூலம் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இக்குளமானது அவிநாசியின் மையப்பகுதியில் 240 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பல கிராமங்கள் நீர்வளம் பெறுகிறது.

சில ஆண்டுக்கு முன், குளம் காக்கும் இயக்கம் சார்பில் பொதுநல அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து குளத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்தனர். இந்நிலையில்,மீண்டும் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் 15‘பொக்லைன்’ இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி குளக்கரை வரை பொக்லைன் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

அங்கு தேசிய கொடியேற்றப்பட்ட பின், களப்பணி துவங்கியது. மூன்று நாட்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் என்றும், இதற்கு தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் நிதியளித்துள்ளதாகவும் பேரூராட்சி சார்பில், 600 பனை விதை நடவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.