​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலி நாட்டில் அருகி வரும் ஹீமல் வகை மான்கள்

Published : Aug 14, 2019 3:08 PM

சிலி நாட்டில் அருகி வரும் ஹீமல் வகை மான்கள்

Aug 14, 2019 3:08 PM

சிலி நாட்டில், தனியே பராமரிக்கப்பட்டு வந்த இரு ஹீமல் வகை மான்கள், வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. சிலி நாட்டின் தேசிய விலங்காக ஹீமல் மான் உள்ளது.

இவ்வகை மான்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதுடன், நோய் பாதித்து உயிரிழப்பதால் அருகி (endangered) வருகிறது. தற்போது அங்குள்ள வனப்பகுதிகளில் 1,500 ஹீமல் மான்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் விளிம்பில் உள்ள இவ்வகை மான்களை பாதுகாக்க, பாதுகாப்பு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹீமல் வகை மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, லாஸ் ரியாஸ் பிராந்தியத்தில் உள்ள வனப்பகுதியில், ஹுய்லோ ஹுய்லோ என்ற அறக்கட்டளை மற்றும் பாதுகாப்பு மையம் சேர்ந்து ஆண் மற்றும் பெண் ஹீமல் வகை மான்களை வனப்பகுதியில் விடுவித்தன. இதனால் 100,000 ஹெக்டேர் வனப்பரப்பில் 20 மான்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, எதிர்காலத்தில் அதன் எண்ணிக்கை உயரும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.