​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரத்தின் மீது கூடு கட்டி வசிக்கும் வனக்கிராமவாசி

Published : Aug 13, 2019 11:31 AM



மரத்தின் மீது கூடு கட்டி வசிக்கும் வனக்கிராமவாசி

Aug 13, 2019 11:31 AM

ஒடிசா மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த நபர், காட்டுயானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தின் மீது பறவைகள் போல் கூடு கட்டி தங்கியுள்ளார். ஒடிசா மாநிலம் கியோஞ்ஹர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழையும் காட்டுயானைகள் அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாயப் பயிர்களை தாக்கி சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் யானைகளுக்கு பயந்து கிராம வாசி ஒருவர் மரத்தின் மீது பறவைகள் போல் கூடு கட்டி தங்கியுள்ளார். இது குறித்து பேசிய அந்த நபர் 3 தினங்களுக்கு முன்பு காட்டு யானைகள் தனது வீட்டை தாக்கி அழித்ததாகவும், மேலும் அடிக்கடி யானைகள் வீட்டின் அருகில் நடமாடுவதாகவும் தெரிவித்தார்.

எனவே அவற்றிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு மரத்தின் மீது கூடு அமைத்து தனது மகனுடன் தங்கியிருப்பதாக கூறிய அவர், அரசு சார்பில் தமக்கு வீடு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கியோஞ்ஹர் மாவட்ட வனத்துறையினர் பாதிக்கப்பட்ட நபருக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகளின் நடமாட்டத்தை கவனிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.