​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமை செயலாளர் சண்முகம் பங்கேற்ற சுதந்திர தின ஒத்திகை

Published : Aug 13, 2019 11:04 AM



தலைமை செயலாளர் சண்முகம் பங்கேற்ற சுதந்திர தின ஒத்திகை

Aug 13, 2019 11:04 AM

சென்னை கோட்டை கொத்தளத்தில், தலைமை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் 15 ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட இருக்கிறார்.

image

இதையொட்டி காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அளவிளான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இன்றைய தினம் நடந்த இறுதி ஒத்திகை நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று, வரவேற்பு அளித்தல், முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைப்பது, போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர்.

image

தொடர்ந்து தேசிய கொடி ஏற்றுதல், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்றது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள, காமராஜர் சாலை மற்றும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள, ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.