​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை

Published : Aug 12, 2019 7:22 PM

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை

Aug 12, 2019 7:22 PM

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் தள்ளாடிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் விமான சேவையை இயக்க முடியாமல் நிறுத்திக் கொண்டது. தற்போது திவால் நடவடிக்கையை அந்த நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ்  நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள், அதற்கு கடன் கொடுத்த வங்கிகள் வசம் உள்ளன. அந்த பங்குகளை விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருந்தன.

மொத்தம் 3 நிறுவனங்கள் மட்டும் அதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலின் வோல்கன் என்ற முதலீட்டு நிறுவனமும் ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில் மறுநாளே அந்த முடிவில் இருந்து அனில் அகர்வால் பின்வாங்கி இருக்கிறார். மதிப்பீடு மற்றும் பல முன்னுரிமைகள் குறித்து ஆலோசித்த பின், இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால் பெயர் வெளியாகாத 2 நிறுவனங்கள் மட்டும் தற்போது போட்டியில் உள்ளன.