​​ Montenegro-வில் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Montenegro-வில் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்

Montenegro-வில் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்

Feb 22, 2018 10:33 PM

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான Montenegro-வில் அமெரிக்க தூதரக கட்டடத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகரான Podgorica-வில் உள்ள தூதரகத்தின் வளாகத்தில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்திய நபர், பின்னர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலையடுத்து தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரைத் தவிர வேறு யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.