பத்மாவத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. படத்தின் இறுதிக் காட்சியில் ராணி பத்மாவதியும், பல்லாயிரக்கணக்கான பெண்களும் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற காட்சி இடம்பெறும்.
இது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால், காட்சியை நீக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தேவதாஸ் படத்தை பார்த்து விட்டு அனைவரும் குடித்துக் கொண்டா? இருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பியது. பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.