​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் அக்சய் குமாரை விளையாட்டாக தள்ளிவிட்ட நடிகை சோனாக்சி சின்ஹா

Published : Aug 11, 2019 11:08 AM

நடிகர் அக்சய் குமாரை விளையாட்டாக தள்ளிவிட்ட நடிகை சோனாக்சி சின்ஹா

Aug 11, 2019 11:08 AM

திரைப்பட விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை நடிகை சோனாக் ஷி சின்ஹா இருக்கையில் இருந்து விளையாட்டாக தள்ளிவிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அக்சய் குமார், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நடித்த மிஷன் மங்கள் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் சோனாக்சி சின்ஹா, வித்யாபாலன், டாப்சி, நித்யா மேனன் ஆகியோர் மத்தியில் அக்சய் குமார் படம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இருக்கையில் பின்புறமாகச் சாய்ந்த அக்சய் குமாரை, சோனாக்சி சின்ஹா கையால் தள்ள அவர் நிலைகுலைந்து பின்புறமாக விழுந்தார். சோனாக்சி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.