​​ இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜன் பொருத்தமானவர் - வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜன் பொருத்தமானவர் - வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம்

இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜன் பொருத்தமானவர் - வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம்

Apr 23, 2018 9:57 PM

இங்கிலாந்து வங்கியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர்கள் என, லண்டன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து வங்கியின் தற்போதைய தலைவரான, கனடாவை சேர்ந்த Mark Carney அடுத்தாண்டு பதவி ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இச்சூழலில், லண்டனை சேர்ந்த Financial Times இதழ், இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுனராவதற்கான வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பெயர் உள்ளது. இப்பட்டியலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த Shriti Vadera பெயரும் இடம் பெற்றுள்ளது.