​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி 2 வயது குழந்தை மாயம்..!

Published : Aug 10, 2019 9:36 AM



பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி 2 வயது குழந்தை மாயம்..!

Aug 10, 2019 9:36 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான 2 வயது குழந்தையை தேடி வருகின்றனர். சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் அதிகளவில் சென்றது.

கால்வாயில் பாறை உருண்டு விழுந்ததால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் 2வயது குழந்தை ஒன்றும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.