​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனிப்பட்ட முறையில் அரசியலில் தொடர விருப்பமில்லை - குமாரசாமி

Published : Aug 06, 2019 7:29 AM

தனிப்பட்ட முறையில் அரசியலில் தொடர விருப்பமில்லை - குமாரசாமி

Aug 06, 2019 7:29 AM

நல்லவர்களுக்கு அரசியல் மிகவும் கடினமான ஒன்று என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமி ஆட்சி கடந்த வாரம் கவிழ்ந்தது.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட முறையில் தனக்கு அரசியலில் தொடர விருப்பமில்லை என்று கூறிய அவர், கட்சித் தொண்டர்களுக்காகவே கட்சியில் நீடிப்பதாக கூறியுள்ளார்.

சாதி மற்றும் பணபலம் போன்றவைதான் ஆட்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், நல்லவர்கள் அரசியல் மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தன்னை ஆட்சியில் அமர வைப்பதற்கு காங்கிரஸ் தலைமை முழு மனதுடன் இருந்ததாகவும், ஆனால் சில உள்ளூர் தலைவர்களுக்கு அது பிடிக்கவிலை என்றும் தெரிவித்தார்.