​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் - அமித் ஷா

Published : Aug 05, 2019 11:19 AM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் - அமித் ஷா

Aug 05, 2019 11:19 AM

இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

வழக்கத்தை விட காஷ்மீரில் துணை ராணுவப்படை குவிப்பு

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

காஷ்மீர் விவகாரம் தொடர்பான எதிர்கட்சிகளின் நோட்டீஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது

காஷ்மீர் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரச்சனை எழுப்பினார்

காஷ்மீர் பதற்றம் குறித்து உள்துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தல்

காஷ்மீர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை அமித் ஷா அறிமுகம் செய்ய உள்ளார் - வெங்கய்யா நாயுடு

மசோதாவை அறிமுகம் செய்த பிறகு காஷ்மீர் பதற்றம் குறித்து விவாதிக்கலாம் - வெங்கய்யா நாயுடு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித் ஷா - குலாம் நபி ஆசாத் வாக்குவாதம்

முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்படுவதாக எதிர்கட்சிகள் புகார்

மசோதா அறிமுகம் மட்டுமே செய்யப்படுகிறது - எம்பிக்கள் படித்துப்பார்க்க அவகாசம் கொடுத்து பிறகு நிறைவேற்றப்படும்-வெங்கய்யா நாயுடு

கடும் அமளிக்கு இடையே விளக்கம் அளித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்க அரசு விரும்புகிறது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது - அமித் ஷா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படும் - அமித் ஷா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்

image

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் கடும் அமளி

கடும் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை ஒத்திவைப்பு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு - அமித் ஷா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும்

சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும்

அமித் ஷா அறிவிப்பு மூலம் மிகப்பெரிய வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

image

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த நேருவின் தவறை தற்போதைய மோடி அரசு சரி செய்துள்ளது - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

image

சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதி மக்களும் சொத்துகள் வாங்க முடியும்

சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை திருமணம் செய்தாலும் சொத்துரிமை கோர முடியும்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் அறிவிப்பாணையும் வெளியீடு

குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியீடு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முடிவு

சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பிராந்தியம் மாற்றப்பட உள்ளது

சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்படும்

காஷ்மீர் தொடர்பான மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமித் ஷா

1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு நீக்கம்

2) சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்படும்

3) லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்

image

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்ற அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது அவசர நிலை பிரகடனம் போன்றது - வைகோ

நாடாளுமன்றத்திலேயே ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது - வைகோ

image

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - வைகோ

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக வைகோ மாநிலங்களவையில் ஆவேச பேச்சு

யூனியன் பிரதேசமாக மாறுகிறது காஷ்மீர்

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது - குலாம் நபி ஆசாத்

 image

3 குடும்பங்கள் இதுவரை காஷ்மீரை கொள்ளையடித்து வந்தன - அமித் ஷா

நாட்டின் பிறகு பகுதி ஏழை மக்களுக்கு கிடைக்கும் சலுகை காஷ்மீர் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை - அமித் ஷா.