​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்

Published : Aug 05, 2019 8:33 AM



மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்

Aug 05, 2019 8:33 AM

கும்பகோணத்தில் மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி சாவகாசமாக ரவுடிகள் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

கும்பகோணம்- தஞ்சை சாலையில் பழைய டைமண்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த 2ந் தேதி இருவர் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மது பானங்களை வாங்கினர்.

அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி ஒருவன் அந்த கத்தியை முதுகில் சொருகியவாறு சாவகாசமாக நடந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.-யில் பதிவாகியுள்ளது.

கும்பகோணம் நகரம் முழுவதும் சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ரவுடிகள் பட்டாக் கத்திகளுடன் வலம் வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற ரவுடிகளின் மிரட்டல்களால் பணிக்கு வருவதற்கே அச்சமடைவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.