​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..!

Published : Aug 05, 2019 8:22 AM



கணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..!

Aug 05, 2019 8:22 AM

சென்னை திருமுல்லைவாயல் அருகே கணவரை பயமுறுத்த விளையாட்டாக  எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மனைவி, தீக்கிரையாகி  உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்த அனிதா என்ற இளம்பெண் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மதுரவாயல் பகுதியில் வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை இறந்து போனதால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு அனிதா தன் கணவருடன் தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார். இதற்கிடையில் வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அனிதாவிடம் சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தன் கணவரை பயமுறுத்துவதற்காக தன்மீது எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல அனிதா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அனிதா உடம்பில் தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.