​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது - அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் அறிவிப்பு

Published : Apr 23, 2018 11:55 AM

அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது - அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் அறிவிப்பு

Apr 23, 2018 11:55 AM

அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான " நமது புரட்சித் தலைவி அம்மா" தெரிவித்துள்ளது.அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது என்றும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.