​​ கருணாநிதி சிரிப்பின் மூலம் வாழ்த்தினார், விஜயகாந்த் கட்டித் தழுவினார்- கமல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதி சிரிப்பின் மூலம் வாழ்த்தினார், விஜயகாந்த் கட்டித் தழுவினார்- கமல்

கருணாநிதி சிரிப்பின் மூலம் வாழ்த்தினார், விஜயகாந்த் கட்டித் தழுவினார்- கமல்

Feb 27, 2018 4:34 PM

நாளை நமதே என்ற தமது அரசியல் பயணத்திற்காக பல்வேறு அரசியல் கட்சிகளையும் பிரமுகர்களையும் சந்தித்தது குறித்து வார இதழில் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார் கமல்ஹாசன்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் தமது அரசியல் பிரவேசத்தை தெரிவித்த போது அவர் சிரித்ததாகவும், அந்த சிரிப்பின் மூலம் தன்னை வாழ்த்துவதைப் புரிந்துக் கொண்டதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த்தை சந்தித்த போது, அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்டித் தழுவி தம்மை ஊக்கப்படுத்தியதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியை சந்தித்தது குறித்து குறிப்பிட்டுள்ள கமல், இருவரும் எதிரும் புதிருமாக இருந்தாலும் போர் தர்மம் குறைந்துவிடக்கூடாது என்று தாம் கூறியதை ரஜினி ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.