​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1952ம் ஆண்டுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை..!

Published : Aug 04, 2019 8:17 AM

1952ம் ஆண்டுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை..!

Aug 04, 2019 8:17 AM

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 17வது மக்களவையின் அலுவல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.

1952ம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, தீவிரவாத செயல்கள் தடுப்பு மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்கள் கடந்த சில நாட்களில் நிறைவேறியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாக கூறிய அவர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாட்டு நலனை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.