​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியலிலிருந்து விலகுவது பற்றி ஆலோசனை..!

Published : Aug 03, 2019 6:32 PM

அரசியலிலிருந்து விலகுவது பற்றி ஆலோசனை..!

Aug 03, 2019 6:32 PM

முழு நேர அரசியலிலிருந்து விலகுவது பற்றி, தாம் யோசித்து வருவதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். திடீரென நிகழும் விபத்து போன்று, எதிர்பாராதவிதமாகவே தாம் அரசியலுக்கு வந்ததாகவும், அவ்வாறே தாம் முதலமைச்சரான நிகழ்வும் நடந்தேறியதாக குமாரசாமி குறிப்பிட்டார்.

கடவுளின் கொடையால், இரண்டு முறை, முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், ஆனால், யாரையும் தம்மால் திருப்திபடுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 14 மாதங்கள் முதலமைச்சராக  இருந்தபோது, கர்நாடக மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டதாகவும், அதில், தமக்கு திருப்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு அரசியல் சூழல் நன்றாக இல்லை என்பதாலும், அமைதியை விரும்புவதாலும், முழுநேர அரசியலிலிருந்து, விலகுவது பற்றி, யோசித்து வருவதாக குமாரசாமி தெரிவித்தார்.