​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலையில் இஸ்ரேலிய உளவுப்பிரிவுக்கு தொடர்பு ?

Published : Apr 23, 2018 2:14 AM

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலையில் இஸ்ரேலிய உளவுப்பிரிவுக்கு தொடர்பு ?

Apr 23, 2018 2:14 AM

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் பங்கிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரான 35 வயது மொகமது அல்-பாட்ஷா கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் தனது குடியிருப்பின் கீழே உள்ள மசூதியில் தொழுகைக்காக சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எந்திர துப்பாக்கியால் சுட்டத்தில்  12 இடங்களில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். அல்-பாட்ஷா ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநர் என்றும் அவருக்கு ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாகவும் மலேசிய ஊடகங்கள் கூறியுள்ளன.

இதனிடையே அல்பாட்ஷாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், முழுமையான விசாரணைக்கு பின்னரே வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தெரியவரும் என மலேசிய போலீஸார் கூறியுள்ளனர்.