​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

Published : Apr 23, 2018 12:30 AM

அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

Apr 23, 2018 12:30 AM

அமெரிக்க உணவு விடுதியில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர்; மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். Tennessee பகுதியில் Nashville என்ற இடத்தில் உள்ள விடுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அரை நிர்வாணமாக வந்த இளைஞர், திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியதாகவும், அவர் பச்சை நிற மேலங்கி அணிந்திருந்ததாகவும் அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்த மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்தனர்.