​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளில்லா விமானத்தை பயன்படுத்த சவுதி அரேபியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு

Published : Apr 23, 2018 12:00 AM

ஆளில்லா விமானத்தை பயன்படுத்த சவுதி அரேபியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு

Apr 23, 2018 12:00 AM

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் அரண்மனை அருகே பறந்த சிறியரக ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அது போன்று ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரியாத்தின் அல் - குஸாமா மாவட்டத்தில், பட்டத்து இளவரசர் அரண்மனை அமைந்துள்ள இடத்தில் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரிகள், ஆளில்லா விமானம் ஒன்று அரண்மனை அருகே பறந்ததாகவும் அதை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.