​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் ஓடி வீணாகி வரும் தண்ணீர்

Published : Aug 02, 2019 10:14 AM



சாலையில் ஓடி வீணாகி வரும் தண்ணீர்

Aug 02, 2019 10:14 AM

சென்னை திருமுல்லைவாயல் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடி வீணாகி வருகிறது.

புழல் ஏரியிலிருந்து ஆவடியிலுள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் ஆவடி பகுதி மக்களுக்கான குடிநீர் தேவைக்காக தண்ணீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

திருமுல்லைவாயல் முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அதிகளவிலான தண்ணீர் சாலையில் ஓடி வீணாகி வருவதோடு, அங்குள்ள கடைகளுக்குள்ளும் புகுந்துள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உயரழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியானதாக பொதுப்பணி துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.