​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது அமெரிக்கா

Published : Aug 01, 2019 6:36 PM

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது அமெரிக்கா

Aug 01, 2019 6:36 PM

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு, போதிய உற்பத்தி காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 65 டாலருக்கு கீழ் குறைந்தது.

158 லிட்டர் அளவைக் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு நாட்களில் முதல் முறையாக விலை குறைந்துள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கியானது தனது வட்டி விகித்தை புள்ளி 25 விழுக்காடு குறைத்தது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பாலும் அதன் விலை குறைந்துள்ளது.

அடர்த்தி குறைந்த பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 85 செண்ட்கள் குறைந்து 64.20 டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 435 ரூபாய் 93 காசுகள் ஆகும்.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் 89 செண்ட்கள் குறைந்து 3 ஆயிரத்து 986 ரூபாய் 12 காசுகளாக உள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் அல்லாத அமெரிக்கா, தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 11.3 மில்லியன் பேரல்களில் இருந்து 12.2 மில்லியன் பேரல்களாக உயர்த்தி உள்ளது. தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கும் என்று உலக பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.