​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

Published : Aug 01, 2019 5:36 PM

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

Aug 01, 2019 5:36 PM

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த பின் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் எனவும், இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும், இதில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் அவர் கூறினார். கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.