​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடைசி சில ஆண்டுகளில் சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை - ஜாங்கிட் வருத்தம்

Published : Aug 01, 2019 4:04 PM



கடைசி சில ஆண்டுகளில் சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை - ஜாங்கிட் வருத்தம்

Aug 01, 2019 4:04 PM

காவல்துறையில் 34 ஆண்டு காலம் பணிபுரிந்திருந்தாலும், கடைசி சில ஆண்டுகளில் சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லையே என்ற வருத்தம் தமக்கு இருப்பதாக ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் கூறியுள்ளார்.

டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட், புதன் கிழமையுடன் ஓய்வு பெற்றார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணியில் இருந்த போது, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கேட்டு டிஜிபி மற்றும் உள்துறைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.

அரசுக்கு கடிதம் எழுதியதற்காக ஊழல் கண்காணிப்பு இயக்குநர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்தார்.