​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை

Published : Aug 01, 2019 2:20 PM

அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை

Aug 01, 2019 2:20 PM

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைவாக வெளியேற்றுவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, பல எம்.பி.க்கள் தங்களுக்கான புதிய குடியிருப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த மசோதா இன்றியமையாதது என்றார்.

மொத்தமுள்ள 15 ஆயிரத்து 416 அரசு ஒதுக்கீட்டுக் குடியிருப்புகளில் 3081 குடியிருப்புகள் வழக்கில் சிக்கியிருப்பது கவலைக்குரியது என்று அவர் கூறினார்.

எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கான அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்குபவர்களை விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வகை செய்யும் புதிய விதிகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வழக்கு காலத்தில் குடியிருப்பின் சேதங்களுக்கு அவற்றில் சட்டவிரோதமாக குடியிருப்பவர் மீதே சுமத்தவும் மசோதா வகை செய்கிறது.