​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.10 லட்சம் கேட்ட காவலர்

Published : Jul 30, 2019 2:26 PM



லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.10 லட்சம் கேட்ட காவலர்

Jul 30, 2019 2:26 PM

சென்னை மாதவரத்தில், லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற காவலர் கைது செய்யப்பட்டார்.

மாதவரத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரி உரிமையாளரான அசோக் குமார் என்பவரை, பெரம்பூரில் வசிக்கும் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவலரான பரமேஸ்வரன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாரிகளில் சோதனை நடத்தி பொய் வழக்கு பதியப் போவதாக மிரட்டி 10 லட்சம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனிப்படை பிரிவு காவலராக தாம் இருப்பதாகவும், மாதவரம் காவல் நிலையத்தில் வந்து தன்னை பார்க்குமாறும் பரமேஸ்வரன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அசோக் குமார் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், பரமேஸ்வரன் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து மாதவரம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகளுக்குள்ளான பரமேஸ்வரன் 10 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.