​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அஞ்சல் தேர்வு - விளக்கம்

Published : Jul 29, 2019 6:59 PM



அஞ்சல் தேர்வு - விளக்கம்

Jul 29, 2019 6:59 PM

அஞ்சல் துறை தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்ற மே மாத அறிவிப்பாணை ரத்து செய்யப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் தபால்காரர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 14 ஆம் தேதி எழுத்துத் தேர்வு ஆங்கிலம், இந்தி மொழியில் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.- எழிலரசன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன், அஞ்சல் துறை சார்பில் இரண்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதன் முதலில் மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை குறித்த விளக்கத்தை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில், மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என ஜூலை 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற மே 10ஆம் தேதி அறிவிப்பு ரத்து செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பாணையின் நடைமுறைகள் தொடர்வதாகவும், அதுதொடர்பான ஆவணத்தை நாளை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.