​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

Published : Jul 28, 2019 6:10 PM

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

Jul 28, 2019 6:10 PM

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் எனவும், முழுமையான தானியங்கி கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின் கார் இயக்கப்படும் போதும் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதியை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெஸ்லா கார்களில், கார் இயக்கப்படாத போது, ஸ்டீரிங்கை ((steering)) பயன்படுத்தி ஓட்டுநர் முன் இருக்கும் டிஸ்ப்ளேவில் விளையாடும் கேமிங் வசதி கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த வெள்ளியன்று டெஸ்லா கார்களில் சதுரங்கம் விளையாடும் வசதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுபோன்ற வசதிகள் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்தையும் பலரும் கூறி வருகின்றனர்.