​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகைக்காக பெண் கொலை..!

Published : Jul 28, 2019 9:45 AM



நகைக்காக பெண் கொலை..!

Jul 28, 2019 9:45 AM

ரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக்காக பெண்ணை கொலை  செய்த லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தென்னிலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் தேதி பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மல்லூத்துப் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை அடுத்த அத்திவாடியைச் சேர்ந்த மோகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனலட்சுமிக்கும், மோகனுக்கும் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் இருந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி மோகன் தனது நண்பரின் காரில், தனலட்சுமியை ஏற்றி கொண்டு, நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

வழியில் தனலட்சுமியிடம் மோகன் பணம் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தென்னிலை வழியாக காரை ஓட்டி சென்ற மோகன், காரை விட்டு தனலட்சுமியை கீழே இறங்கச்சொல்லி மீண்டும் பணம் கேட்டுள்ளார்.

அங்கு தனலட்சுமி அணிந்திருந்த நகையை தரும்படி கேட்ட போது அவர் தர மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி கொலை செய்த மோகன் சாலையோரத்தில் தள்ளிவிட்டுள்ளார். தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சுமார் பத்து சவரன் தங்க நகையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

கைது செய்யப்பட்ட மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.