​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைவாழ் பெண்ணைக் காதலித்த இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை

Published : Jul 28, 2019 8:49 AM



மலைவாழ் பெண்ணைக் காதலித்த இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை

Jul 28, 2019 8:49 AM

குஜராத் மாநிலத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் இஸ்லாமிய இளைஞர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரூச் மாவட்டத்தில் உள்ள ஜகாடியா பகுதியைச் சேர்ந்த மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணும், தரோலி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்ததால், அந்தப் பெண், இளைஞரைச் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலியைச் சந்திக்க அந்த இளைஞர் முயன்றதாகவும், இதனையறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு கம்பு மற்றும் இரும்புக் கம்பியால் இஸ்லாமிய இளைஞரைத் தாக்கியுள்ளனர்.

இதில் அவர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அஜய் வாசவா, விஜய் வாசவா, அக்சய் வாசவா மற்றும் தினேஷ் வாசவா என்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.