​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழக்கை திரும்பப் பெற்ற 3 அதிமுக எம்எல்ஏக்கள்

Published : Jul 26, 2019 4:11 PM



வழக்கை திரும்பப் பெற்ற 3 அதிமுக எம்எல்ஏக்கள்

Jul 26, 2019 4:11 PM

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரும்  சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கை திரும்பப் பெறவுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவரும்  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், 3  எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து எம்எல்ஏக்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 3 எம்எல்ஏக்களுக்கும் அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிறபித்தது.

வழக்கு விசாரணையும் ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக பெரும் பின்னடைவை  சந்தித்தது.

இதைத் தொடர்ந்து, பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் முதலமைச்சரை சந்தித்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறவுள்ளதாக மூவரும் தெரிவித்துள்ளனர். வழக்கை மூவரும் திரும்பப் பெற்ற பின்னர், பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீதான நடவடிக்கையை சபாநாயகர் கைவிட  அதிமுக தலைமை சார்பாக அரசு கொறடா ராஜேந்திரன்  வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.