​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள்

Published : Jul 25, 2019 12:47 PM



ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள்

Jul 25, 2019 12:47 PM

ஆப்கானிஸ்தானில், ஒரே நாளில் நடந்த 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில், அரசு ஊழியர்கள் 5 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து, தலைநகர் காபுல் வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் அரசு ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்த நிலையில், அங்கு வந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இந்த இரு சம்பவங்களும் ஓய்வதற்குள், காபுல் நோக்கி சென்ற கார் ஒன்றும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

ஒரே நாளில் நடந்த இந்த கோர சம்பவங்களில், 5 அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தீவிரவாத அமைப்பு எதுவும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.