​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதவியில் இருந்த போது குமாரசாமி கையெழுத்திட்ட கடைசி உத்தரவு

Published : Jul 25, 2019 6:33 AM



பதவியில் இருந்த போது குமாரசாமி கையெழுத்திட்ட கடைசி உத்தரவு

Jul 25, 2019 6:33 AM

முதலமைச்சராக பதவியில் இருந்து விலகும்முன்பு கடைசியாக தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உத்தரவில் கையெழுத்திட்டதாக  குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் குறைவான வருவாய் உள்ள விவசாய கூலிகள் அல்லது இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உடைய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவை இழந்தபின்னர் புதன்கிழமை தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அளித்த குமாரசாமியிடம் காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இக்காலத்தில் அவர் எந்த வித கொள்கை ரீதியான முடிவும் எடுக்க முடியாது. எனவேதான் செவ்வாய்க்கிழமை இரவே தாம் பதவியில் இருந்த போதே கடைசியாக கையெழுத்திட்டு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு ஓராண்டு அமலில் இருக்கும் என்றும் அதற்குள் விவசாயிகள் தங்கள் கடன் விவரங்களை தாக்கல் செய்யலாம் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது தமது அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் இந்த உத்தரவை மிகுந்த மன நிறைவுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.