​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ரூ.15 கோடி மோசடி

Published : Jul 24, 2019 9:09 PM

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ரூ.15 கோடி மோசடி

Jul 24, 2019 9:09 PM

தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம், 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 3 பேர் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த முனாவர் என்பவர் தோல்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம், அஸ்வக் அகமது, ரபீக், கைசர் ஆகியோர், ராணிப்பேட்டையில் தோல்பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் முகவர்கள் எனக் கூறியுள்ளனர். தங்களுடைய நிறுவனத்திற்கு தோல் பொருட்களை தயாரிப்பதற்கான தோல்களை சப்ளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி முனாவர் தோல் பொருட்களை சப்ளை செய்துள்ளார்.

இந்நிலையில், பிரபலமான தனியார் நிறுவனத்தின் பெயரில் மூவரும் வங்கி கணக்கை தொடங்கி பணபரிவர்த்தனையும் செய்துள்ளனர். அதன்பின் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தோல் பொருட்களை சப்ளை செய்துள்ளதாகவும், ஆனால் அதற்கான தொகையை தராமல் மூவரும் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இகுறித்து பிரபல தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தியபோது, மூவரும் அந்நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதேபோன்று 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.