​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலைஞர் சிலை திறப்பு நிகழ்விற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு

Published : Jul 24, 2019 12:57 PM



கலைஞர் சிலை திறப்பு நிகழ்விற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு

Jul 24, 2019 12:57 PM

சென்னை முரசொலி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலைஞர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது முழு உருவச்சிலை திறக்கப்படவுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இச்சிலையை திறந்துவைக்கவுள்ளார். கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு கொடுத்தும் கமல்ஹாசன் அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.