​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகத்தில் முழுமையாக ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மூவர் தான்

Published : Jul 24, 2019 6:57 AM

கர்நாடகத்தில் முழுமையாக ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மூவர் தான்

Jul 24, 2019 6:57 AM

கர்நாடகத்தில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சியில் இருந்துள்ளனர்.

1962 முதல் 67 வரையில் நிஜலிங்கப்பாவும் 1972 முதல் 77 வரையில் தேவராஜ் அர்சும், 2013 முதல் 18 வரை சித்தராமையாவும் முழுதாக 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியை நிறைவு செய்துள்ளனர். இந்த மூன்று முதலமைச்சர்களும் காங்கிரசை சேர்ந்தவர்களே.

பாஜக மற்றும் குமாரசாமி தலைமையிலான அரசுகள் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யாமலே கவிழ்ந்துள்ளன. 2007ம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா 7 நாட்களிலேயே மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவை விலக்கியதால் ஆட்சியை இழந்தார்.

2008ம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் 2011ம் ஆண்டில் ஊழல் புகார் காரணமாக அவர் பதவியை விட்டு விலக நேரிட்டது.

மூன்றாவது முறையும் எடியூரப்பா 2018ம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற போதும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவருடைய அரசு ஆறு நாட்களில் கவிழ்ந்தது.

தற்போது குமாரசாமி அரசும் பெரும்பான்மையை இழந்ததால் அதிகாரத்தை இழந்துள்ளது. இதுவரை கர்நாடகத்தில் 25 பேர் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.