​​ விஷாலுக்கு சவால்..! திரையரங்கு உரிமையாளர்கள் ஆவேசம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷாலுக்கு சவால்..! திரையரங்கு உரிமையாளர்கள் ஆவேசம்

Published : Feb 18, 2018 2:17 AM

விஷாலுக்கு சவால்..! திரையரங்கு உரிமையாளர்கள் ஆவேசம்

Feb 18, 2018 2:17 AM

திரையரங்குகளில் பாப்கார்ன் விலை வேறுபாடு குறித்து பேசும் நடிகர் விஷால், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல ஹாசனுக்கு வழங்கப்படும் சம்பளம் போலவே அனைத்து நடிகர்களுக்கும் வழங்க தயாரா ? என்று திருப்பூர் சுப்பிரமணியன் சவால் விட்டுள்ளார்.

திருச்சியில், தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க மாநில கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

திரையரங்கு கட்டணத்துடன் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், திரையரங்கு உரிமையாளர்கள் விவகாரங்களில் தலையிடும், தயாரிப்பாளர் சங்கதலைவர் நடிகர் விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.