​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

Published : Jul 23, 2019 12:10 PM



தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

Jul 23, 2019 12:10 PM

நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ள பணிகளில் 75 சதவீதத்தை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உள்ளூர் பணியாளர்களக்கு திறன் இல்லை எனக் கூறி அதிகப்படியாக வெளி ஆட்களை பணிக்கு எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாறாக திறமையற்றவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.