​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

Published : Jul 23, 2019 11:58 AM



சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

Jul 23, 2019 11:58 AM

சென்னை காசிமேட்டில் கொள்ளையர்கள் இருவர் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியரான துளசிராம், காசிமேடு ஜி.என். செட்டி தெருவில் மூடியிருந்த ஒரு கடை வாசலில் மழைக்காக ஒதுங்கியுள்ளார்.

அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடியுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடியவர்கள் காசிமேடு துறைமுகம் அருகே பல்சர் இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திங்களன்று வண்ணாரப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்துடன் இருவரையும் போலீசார் பார்த்துள்ளனர்.

அவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட, மற்றவன் தப்பியோடினான். விசாரணையில் அவன் புதுவண்ணாரப்பேட்டையச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது.

அவனிடமிருந்து கத்தி, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கண்ணன் என்ற மற்றொரு ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் சுற்றித் திரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.