​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமென மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Published : Jul 23, 2019 11:57 AM



வேலூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமென மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Jul 23, 2019 11:57 AM

வேலூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட அரிதாஸ் தாமரைக் குளத்தில் சுற்றுச்சுவர்கள், நடைபயிற்சிக்கான பாதை, உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குளத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரக் கன்றுகளை நட்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கருவிகளில் அவர் உடற்பயிற்சியும் மேற்கொண்டார்.

கொளத்தூர் பெரியார் நகரில் 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலகம் ஒன்றையும் திறந்து வைத்தார். அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் பயின்ற 65 மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்கள் நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.