​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published : Jul 22, 2019 8:34 PM

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Jul 22, 2019 8:34 PM

சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இது இஸ்ரோ மற்றும் இந்தியாவின் வரலாற்று சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்த குறிப்பிடத்தக்க நாடுகளின் வரிசையில் இந்தியாவை இடம்பெறச் செய்த அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தமிழக மக்களின் சார்பா இதயப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சாதனை இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் தூண்டுகோளாகவும் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் பணியாற்றிய அனைத்து குழுவினருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியன் மூலம் விஞ்ஞானிகள் நம் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.