​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், நீலகிரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

Published : Jul 22, 2019 6:53 PM

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், நீலகிரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

Jul 22, 2019 6:53 PM

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் தொடர்ந்த மனுவிற்கு, நீலகிரி ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான சயான் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கோவை மத்திய சிறையில் சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க கோவை மாவட்ட ஆட்சியர், மார்ச் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சயான் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், விபத்தில் மனைவியையும், பிள்ளையையும் பறிகொடுத்த சம்பவத்தை தன் மீதான குற்ற வழக்குகளுடன் தொடர்புபடுத்தியிருப்பதாகவும், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.