​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published : Jul 22, 2019 6:50 PM

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Jul 22, 2019 6:50 PM

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதோடு, தென் தமிழகத்தின் வளி மண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது என்றார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அவர் குறிப்பிட்டார்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்ற அவர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்யும் என்ற அவர், தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்து இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றார்.