​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி

Published : Jul 22, 2019 6:43 PM

8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி

Jul 22, 2019 6:43 PM

சென்னை- சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, மத்திய திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்? சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்பதற்கான பதிலை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.